தமிழ்நாடு அரசினால் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழின உணர்வாளர் கொளத்தூர் மணி இன்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த கொளத்தூர் மணி செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது, ஈழுத்தமிழ் மக்களிற்கு ஆதரவான தமது போராட்டங்கள் முழு மூச்சுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் இடம்பெற்ற தம்மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்த கொளத்தூர் மணி, சோனியா காந்தி தமிழ்நாடு வந்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தமது அமைப்பு எதிர்ப்பு வெளியிடும் எனவும் கூறினார்.
இதேவேளை, தமிழ்நாடு வரவுள்ள சோனியா காந்திக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும், தமிழ் திரையுலகம் உட்பட அனைவரும் இதில் இணைந்துகொள்ள வேண்டும் எனவும், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment