Tuesday, May 26, 2009

இடம் பெயர்ந்தோரை பராமரிக்க 1 மில்லியன் டாலர் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது

வன்னியில் உள்ள இடம்பெயர்ந்த மக்களைப் பராமரிக்க ஒரு நாளைக்கு சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. WORLD VISION தொண்டு நிறுவனமே தற்போது வன்னி மக்களுக்கான உணவு மற்றும் குடி நீர் என்பனவற்றை விநியோகித்து வருகிறது. ஒரு தனி நபருக்கு $3.50 டாலர்கள் ஒரு நாளைக்கு தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.

சுமார் 300,000 பொதுமக்கள் அகதிகளாகி 4 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந் நிறுவனம், தனது கையிருப்பில் இருந்த அனைத்து நிதிகளையும் இலங்கைக்கு செலவழிப்பதாகக் கூறியுள்ளது. இத் தொண்டு நிறுவனம் தற்போது, ஜ.நா மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களை தமக்கு நிதியுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இடம்பெயர்ந்து அல்லலுறும் சுமார் மூன்று லட்சம் மக்களில் 90,000 பேர் சிறுவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. இதில் அனாதைச் சிறுவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.