Tuesday, May 26, 2009

புலம் பெயர் தமிழ் மக்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்

தற்சமயம் எமக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி வவுனியாவில் இருக்கும் தமது உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாடி முடித்து துண்டித்ததும். இலங்கை இராணுவத்தினர் என தம்மை அடையாளப்படுத்தி சிலர் தொலைபேசியில் அழைத்து, வெளிநாட்டில் உள்ளவர்களை மிரட்டுவதாகவும், ஊரில் உள்ள அவர்களின் உறவுகள் சுமூகமாக தடுப்பு முகாம்களில் வாழவேண்டுமேயானால் தமக்கு பணம் அனுப்பும் படி கூறி, கொழும்பில் உள்ள சில நபர்களை தொடர்புகொள்ளுமாறு அச்சுறுத்துவதாகவும் அறியப்படுகிறது.

நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் எமது  இணையத்திற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இச் செய்தி பிரசுரிக்கப்படுகிறது. ஆதலால் மக்களே உங்கள் உறவுகளுடன் தொடர்புகொள்ளும் போதும் தொலைபேசியில் பேசும் போது மிகுந்த அவதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பணம் அனுப்பும் விடையம், அல்லது வேறுவிடையங்கள் கதைப்பதை தவிர்த்துக்கொள்ளவும், அல்லது சற்று புரியாத மறைமுக பாஷையில் உரையாடவும் என எமது புலம் பெயர்வாழ் தமிழ் உறவுகளுக்கு எமது இணையம் தாழ்மையுடன் வேண்டிநிற்கிறது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.