நேற்று சனிக்கிழமை பிற்பகல் அவரது போராட்டம் துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு மாற்றப்பட்டு நடைபெற்றது. இன்று முதல் Parramatta Church Street Mall ல் பகல் வேளையிலும் இரவு வேளையில் அதே ஆலயத்தில் முன்னெடுக்கப்படும்.
கடந்தமாதம் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் தண்ணீர் மற்றும் உணவு இன்றி போராடிய சுதா அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சின் உத்தரவாதத்தை நம்பி போராட்டத்தை கைவிட்டு அந்த உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படாத விரக்தியில் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்தார்.
இன்று ஏழாவது நாளையும் தாண்டி போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். உடலால் சோர்வுற்றாலும் உள்ளத்தால் நிரம்பிய நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கின்றார்.
இன்று மட்டும் வன்னியில் 3000க்கு மேற்பட்ட மக்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொழையை அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவர சிட்னியிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு தமிழ் இனப் படுகொலையை நிறுத்துவதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த உண்ணாவிரதம் நகர சபை மற்றும் காவல்துறை அனுமதி பெற்று நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
நாளை (11.05.09) காலை 7 மணியளவிலிருந்து மாலை 7 மணிவரை Parramatta Church Street Mall ல் உண்ணாவிரதம் நடைபெறும். 7 மணியின் பின்னர் துர்க்கை அம்மன் ஆலயத்தில் உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெறும்.




No comments:
Post a Comment