தற்போதைய களமுனை சிறிலங்கா படையினருக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மோதல்கள் ஒரு உக்கிர நிலையை அடைந்துள்ள நிலையில் களமுனை ஒரு பாலைவனத்தின் அமைப்பை ஒத்ததாக மாற்றம் அடைந்துள்ளது.
மணல் புயல்களும், அதிக வெப்பமும் படையினருக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதனால் படையினர் இரவிலேயே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
படையினர் வெளியான களமுனைகளில் அதிக பாதுகாப்புக்கள் இன்றி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனால் அவர்கள் அதிக இழப்புக்களை சந்தித்து வருகின்றனர்.
முன்னைய காலங்களில் சில படையினரே குறிபார்த்து சுடும் தாக்குதலில் சிக்கி பலியாகியிருந்தனர். தற்போது இந்த தொகை அதிகரித்துள்ளது.
எனவே, மாலை வந்த பின்னரே படையினர் தமது நடவடிக்கைகளை தொடங்கி வருகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment