Sunday, May 10, 2009

யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்கள், நிரந்தர இராணுவ தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்படவுள்ளனர்

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் இராணுவ தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை, தென்மராட்சி, கொடிகாமம் மற்றும் கைதடி பிரதேசங்களில் பாரிய மூன்று முகாம்களை அமைத்து நிரந்தரமாக குடியேற்ற சிறிலங்கா இராணுவம் தீர்மானித்துள்ளது.
எனினும், மிருசுவில் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மற்றும் கொடிகாமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளின் தடுப்பு முகாம்கள் தொடர்ந்தும் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குருநகர், கோப்பாய், கைதடி சிறுவர் முகாம், கைதடி விடுதி, சாவக்கச்சேரி இந்து கல்லூரி மற்றும் மகளிர் பாடசாலை, கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயம், நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் ஆகிய முகாம்களில் உள்ள வன்னி மக்கள், தென்மராட்சியில் அமையவுள்ள நிரந்தர இராணுவ தடுப்பு முகாமிற்கு மாற்றப்படவுள்ளனர்.

இதேவேளை, மிருசுவில் இராணுவ தடுப்பு முகாமில் உள்ள சுமார் 600 மாணவர்கள், யுனிசெவ் அமைப்பினால் நடத்தப்படுகின்ற தற்காலிக கூடாரங்களிலான பாடசாலைகளுக்கு திங்களில் இருந்து செல்கின்றனர்.

மிருசுவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக பாடசாலை, மற்றுமொரு நிரந்த இராணுவத் தடுப்பு முகாமிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏ9 வீதி ஊடான தம்பிதோட்டம் மற்றும் சாவக்கச்சேரி – கச்சாய் வீதியில் அமைந்துள்ள அல்லாரை பிரதேசமே இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.