Friday, May 29, 2009

செட்டிகுளம் இடைத்தங்கல் முகாமில் தினமும் சராசரியாக 14 மரணங்கள்: திடீர் மரண விசாரணை அதிகாரி

வவுனியா, செட்டிகுளம் இடைத்தங்கல் முகாமில் தினமும் சராசரியாக 14 மரணங்கள் நிகழ்வதாக செட்டிகுளம் திடீர் மரண விசாரணை அதிகாரி இ.சாகுல்ஹமீட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிமை முதல் புதன்கிழமை வரையிலான நான்கு நாட்களில் இந்த முகாம்களில் 56 பேர் வரையான வயோதிபர்கள் மரணமாகியுள்ளனர். இவ்வாறு இறந்தவர்கள் அனைவரும் 70 வயதிற்கு மேற்ப்டடவர்கள் என தெரிவித்துள்ளார்.

அண்மை நாட்களில் சராசரியாக 14 மரணங்கள் இடம்பெறுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை 12 பேரும், திங்கட்கிழமை 11 பேரும், செவ்வாய்க்கிழமை 14 பேரும், புதன்கிழமை 9 பேரும் மரணமடைந்துள்ளனர்.

சரியாக பராமரிக்கப்படாமையே முதியவர்களின் இறப்பிற்கு காரணமாகும். உஷ்ணம் கூடிய இந்தக்கால நேரத்தில் கூடாரங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர் போன்ற பல பிரச்சினைகள் நலன்புரி நிலையங்களில் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறான வயோதிபர்களது மரணங்களைத் தவிர்க்கவேண்டுமானால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு முறையாக பராமரிக்க வேண்டுமெனவும் ஹமீட் ஆலோசனை கூறியுள்ளார்.

இந்தநிலையில், இறந்தவர்களின் சடலங்கள், வவுனியா நீதிமன்றின் அனுமதியுடன், புதைக்கப்படுகின்றன

இதேவேளை தடுப்பு முகாம்களில் உள்ள முதியவர்களை, அவர்களை பராமரிக்கும் வகையில் முதியோர் இல்லத்திற்கோ அல்லது உறவினர்களின் வீடுகளுக்கோ செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.