Thursday, May 7, 2009

உலகின் 100 பிரபலத்தில் ஒருவர் - மாயா! நிர்க்கதியான தமிழ் மக்களை பற்றி..


த 2009 டைம் 100' வெளியிட்டுள்ள 2009 க்கான உலகின் செல்வாக்கு நிறைந்த 100 நபர்களில், ஈழத்தை சேர்ந்த, பிரபல பொப் நட்சத்திரம் மாயா அருள்பிரகாசமும் (M.I.A) இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவின் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமா, ருஷ் லிம்பங், ஜோர்ஜ் க்லூனி ஆகிய பிரபலங்கள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில்,

தமிழர் தாயகத்தை பிறப்பிடமாக கொண்டு, அகதியாக பிரித்தானியா சென்ற மயா அருள்பிரகாசமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது கடும் முயற்சியாலும், இசை ஆர்வத்தினாலும், தன்னை உலகம் முழுவதும் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பை பெற்றுக் கொண்டவர் மாயா. சிறந்த பின்ணனி இசைக்காக ஆஸ்கார் விருதினை தட்டிச்சென்ற 'ஸ்லம்டோக் மில்லியனர்' திரைப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் இவர் பாடிக்கொடுத்த பாடலும் பிரபல்யமானது.

பாடகர், நடிகர், தயாரிப்பாளர், டீ.ஜே, பேஷன் டிசைனர் என பன்முகங்களாக பரிமாணம் கண்டுள்ள மாயா, டைம்ஸின் 100 க்குள் வந்ததையிட்டு பெருமையடைகிறார். இது தொடர்பாக டைம்ஸ் க்கு அளித்த பேட்டியில்,

போரினால் பாதிக்கபப்ட்ட தனது கடந்த கால வாழ்வினை பகிர்ந்து கொள்கிறார். தன்னை போல் போரினால் பாதிக்கப்பட்ட மக்களினை பற்றி தன்னால் வெளிஉலகத்துக்கு கொண்டு வர முடிவதற்கு, இசையுலகம் உதவிபுரிவதாக கூறும் மாயா, தனது ஒரு பாடலில் பின்ணனி இசையில் துப்பாக்கி சத்தங்கள் கேட்கும், அது இசைக்காக அல்ல, உண்மையான சத்தங்கள், என்னால் அவற்றை உணர முடியும், காரணம் நான் உண்மையாக அவற்றை கேட்டுள்ளேன் எனக்கூறுகிறார். மேலும் சிறிலங்காவில் தொடரும் போரினால் தமிழ் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னமும் அங்கு சிக்கியிருக்கும் 300,000 தமிழ் மக்கள் உயிராபத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும், அவர்கள் ஒரு தவறும் செய்யவில்லையே என, உருக்கமாக தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்துள்ள போதும், அவரை தன்னை பற்றி ஊடகங்களுக்கு தெரிவிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் விட்டு விடாமல், இலங்கையில் நடக்கும் தமிழின அழிப்பை பற்றியும், தனது மக்கள் அங்கு படும் துன்பங்கள் பற்றியும், கூறுகிறார் மாயா.

நேற்று முன்தினம் 'டைம் 100' அறிவித்தல் தொடர்பாக இடம்பெற்ற பிரபலங்களின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மாயா, அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மனைவியான மிச்சேல் ஒபாமாவினையும், சந்தித்துள்ளார், அப்போது இலங்கை தமிழ் மக்களின் இன்றைய நிலை பற்றி அவரிடம் எடுத்துரைத்துள்ளார்.
'The 2009 TIME 100' தரப்படுத்தலில் கலை, கலைஞர்கள் பகுப்பில் இடம்பெற்றுள்ள மாயா அருள்பிரகாசம் (M.I.A) தனக்கு விருப்பமானதையும், தன்னிடமிருந்து தன்னுடைய ரசிகர்களுக்கு பிடித்தமானவற்றையும் மட்டுமே இசையில் கொண்டு வருபவர். அங்கோலாவை பிரதிநிதித்துவப்படுத்திய இசை அல்பம், பால்டிமோரில் செய்த டீஜே அல்பம், அவுஸ்திரேலிய சிறுவர்களினால் பாடப்படும் Rap அல்பம், போன்றவை இவருடைய புகழை உயர்த்தின.

இவரை பற்றி பிரலப இயக்குனரும், இசை அல்பங்கள், விளம்பரங்கள் செய்பவருமான ஸ்பைக் ஜோன்ஸ் (Spike Jonze) தெரிவிக்கையில் தனக்கு முன்னால் என்ன நிகழ்கிறதோ அதையே தனது இசையிலும் கொண்டு வருபவர் மாயா, அவரிடம் தனித்தன்மை இருக்கிறது. இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர், தன்னுடைய 10 வயது வரை ஆங்கில மொழியே தெரியாதவர்.

எனினும், தன் முன்னே உள்ள எல்லா எல்லைகளையும் கடந்து, சிறுவயதில் இருந்தே தனக்கு பிடித்தமான அனைத்தையும் இசையில் கொண்டு வந்தார். கடந்த கோடை காலத்தில் பிலெடெப்பியாவில் தயாரிக்கபப்ட்ட ஆல்பத்தில், இராக் யுத்தத்திற்கு எதிராக, இராணுவ ஆடை அணிந்தர்வகளுடன் நின்று இவர் பாடிய பாடல் பல்வேறு விமர்சனத்துக்குள்ளாகிய போதும், எவ்வித தாக்கமும் மாயாவிடம் செல்வாக்கு செலுத்தவில்லை. ஏழ்மையிலும் வறுமையிலும் வாடும் மக்களுக்கானவர் அவர், என பெருமிதத்துடன் கூறுகிறார் ஜோன்ஸ்.

இலங்கையின் வடக்கில் சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் தமிழின அழிப்பிற்கான இராணுவ முன்னெடுப்புக்களில், இதுவரை 300,000 தமிழ் மக்கள் தமது அகதிகாளக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர், சிறிலங்கா இராணுவ முகாங்களுக்குள்ளும், தடுப்பு முகாங்களுக்கும், சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். உண்பதற்கு உணவில்லாமல், குடிநீர் இல்லாமல் தினந்தோறும் தடுப்புமுகாம்களில் செத்துக்கொண்டிருக்கும் இவ் அகதிகளில், சிறுவர்கள், இளைஞர்கள், அனைவருமே தனித்திறமை வாய்ந்த, தாயக மைந்தர்களே!

இங்கிருந்து அகதியாக சென்ற மாயாவினால் உலகின் பிரபல்யம் வாய்ந்த 100 நபர்களுக்குள் வர முடிகிறது எனின், பெற்ற தாய் தந்தையை, சகோதரனை இழந்தும் தனது தாயக மண்ணை இழந்தும், முட்கம்பிகளுக்குள் சிறைபிடிக்கபப்ட்டும் வாழ்ந்து கொண்டு, தமது எதிர்கால நம்பிக்கைகளையும், இலட்சியத்தினையும் மட்டும் கரங்களில் அழுத்தி வைத்துக் கொண்டு, வெளி உலகை எட்டிப்பார்க்க விரும்பும் தமிழீழ இளைஞர்களும், சிறார்களும் வெளிவந்தால்......

''டைம் 100' க்கு மாயா அளித்த செவ்வியை காண இங்கு அழுத்துங்கள்'.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.