கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் குழுவினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (பிள்ளையான் குழு) அனைத்து உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் மேயர் சிவகீதா பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிள்ளையான் நாடு திரும்பியுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உயர்பீடம் கூடி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வது குறித்த இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment