Tuesday, June 2, 2009

உதவிகளுக்காக அடிபணியமாட்டோம்:மஹிந்த ராஜபக்ஷ

உதவி வழங்கும் நாடுகளிடமிருந்து உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான நிபந்தனைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் இணங்காது என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

“முன்னைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைப் போன்றல்லாது, சர்வதேச நாணயநிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்ற சர்வதேச உதவி வழங்கும் அமைப்புக்களின் நிபந்தனைகளுக்கு நாம் அடிபணியமாட்டோம். ஊழியர் சேமலாப நிதியம் போன்றவற்றின் உதவியுடன் நுரைச்சோலை, கெரவலப்பிட்டிய மற்றும் மேல் கொத்மலைத் திட்டம் போன்ற மின்உற்பத்தி நிலையங்களை எம்மால் அமைத்துக்கொள்ளமுடியும். எமது சொந்த நிதியில் தனித்து செயற்படும் நிலையில் நாம் உள்ளோம்” என அவர் கூறினார்.

அதேநேரம், இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ‘முடியாது’, ‘இயலாது’ என்ற பதங்கள் அரசாங்கத்தின் கொள்கையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

வீதிகளை அபிவிருத்தி செய்தல், மின்னுற்பத்தி நிறுவனங்களை அமைத்தல் போன்ற நாடு முழுவதும் நன்மையடையும் அபிவிருத்தித் திட்டங்களையே அரசாங்கம் தற்பொழுது முன்னெடுத்துவருகிறது எனவும், வடக்கின் வசந்தம் செயற்திட்டத்தின் கீழ் வடபகுதியைக் கூடிய விரைவில் அபிவிருத்திசெய்யவிருப்பதாகவும் மகிந்த குறிப்பிட்டார்.

வடக்கிலுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சாரங்கள் வழங்கப்பட்டு, அனைத்து வீதிகளும் புனரமைக்கப்பட்டு, பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றன அமைக்கப்பட்டு துரித அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இதற்கு முன்னுரிமை வழங்கியிருப்பதாகவும் கூறினார்.

“இது மிகவும் சவால் மிக்க இலக்கு. இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரசாங்கம் நிதியுதவிகளைத் தேடிக்கொள்ளவேண்டும். ஆனால், இலங்கைக்கு நட்புறவான நாடுகளிடமிருந்தே உதவிகளைப் பெற்றுக்கொள்வோம்” என்றார் அவர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.