Monday, June 1, 2009

சிறுபான்மை இனத்திற்கு எதிரான வெற்றியை பெருமெடுப்பில் கொண்டாட தயாராகும் சிறலங்கா

சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் உள்ள காலிமுகத்திடலில் நாளை மறுநாள் பெருமெடுப்பிலான வெற்றி விழாவினை கொண்டாட சிறிலங்கா அரசாங்கமும் பெரும்பான்மை சிங்கள மக்களும் தயாராகி வருகின்றனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

சிறுபான்மை தமிழ் மக்களை அனைத்துலக சமூகத்தினதும் இந்திய மத்திய அரசாங்கத்தினதும் ஆதரவுடன் போரில் தோற்கடிக்கப்பட்டதை பெரும் வெற்றி விழாவாக கொண்டாட சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருகின்றது.

காலிமுகத்திடலில் நாளை மறுநாள் புதன்கிழமை நடைபெறவுள்ள கொண்டாட்டங்களின்போது முப்படையினர் மற்றும் காவல்துறை, ஊர்காவல் படையினரின் அணிவகுப்புக்களும் ஆயுத கண்காட்சிகளும் நடைபெறவுள்ளன.

அதற்கு ஏதுவாக நாளை நள்ளிரவில் இருந்து எதிர்வரும் வியாழக்கிழமை (04.06.01) பிற்பகல் வரையிலும் பம்பலப்பிட்டிக்கும் மருதானைக்கும் இடையிலான தொடருந்து சேவைகளை அரசாங்கம் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தியுள்ளது.

மேலும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 21 அரசாங்க பாடசாலைகளும் முதலாம் ஆம் நாளில் இருந்து மூன்றாம் நாள் வரையிலும் மூடப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.