கொழும்பு புதுச்செட்டித்தெருவில் இனந்தெரியாத ஆயுத தாரிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் அப்பலோ தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட விமலன் சற்குணராஜா (வயது 26) நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 26 ம் திகதி பிற்பகல் 1.00 மணியளவில் வீட்டிற்கு அருகாமையில் வைத்து ஆட்டோ ஒன்றில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுடப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த இளைஞரின் தந்தைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாகவும், இவரது தந்தையார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவத்தை ஒத்தவர் எனவும், இவர் தற்போது இந்தியாவில் தங்கியுள்ளார் எனவும் பாதுகாப்பு தரப்பினருககு தவல்கள் கிடைத்துள்ளது என்று காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment