Monday, June 1, 2009

வன்னியில் அடைக்கப்பட்டுள்ள மக்களுக்கு கைரேகை பதிவுகொண்ட அடையாள அட்டை

வன்னியில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மக்களுக்கு கைவிரல் அடையாளம் பதிவுகொண்ட அடையாள அட்டை வழங்கத் திட்டமிட்டிருப்பதாக தெரியவருகிறது. இவ்வகையான அடையாள அட்டைகளில் பல விடையங்களை உள்ளடக்கி வைத்திருக்கக்கூடிய "சிப்" எனும் வசதிகாணப்படும்.

தேவையான நேரத்தில் காவல்துறையினரால் கணனியில் அல்லது கையடக்க உபகரணத்தில் அடையாள அட்டையில் உள்ள விபரங்களை வாசிக்க முடியும். இது தமிழர்களை முற்றாக அடிமைப்படுத்து விடையமாகும். ஒவ்வொரு தமிழர்களுடைய தகவல்கள் அவர்களின் கைவிரல் ரேகைகள், மற்றும் இரத்தப் பிரிவின் அடையாளங்கள் என்பன அனைத்தும் இதில் சேகரிக்கப்படப் போகின்ற விடையமாகும்.

தமிழர்களை ஒரு விலங்குகள் போல அல்லது பரிசோதனை பொருளாக அடையாளப்படுத்தும் நிகழ்வு தற்போது நடைபெறப்போகிறது. வன்னியில் இருக்கும் அனைத்துத் தமிழர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட அனைவரது, விரல் ரேகை அடையாளங்கள் கொழும்பில் சேகரித்துவைக்கப்படப் போகிறது ஒரு குற்றவாளிகளைப் போல. இது தான் இன்றைய நிலை.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.