Tuesday, June 2, 2009

சிறிலங்காவின் மூத்த ஊடகவியலாளர் மீது சிறிலங்கா படை புலனாய்வுத்துறையினர் தாக்குதல்

சிறிலங்காவில் இடம்பெற்றுவரும் ஊடக அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்துவந்த இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளரும் மூத்த ஊடகவியலாளருமான போத்தல ஜெயந்த (வயது 45) சிறிலங்கா படைப் புலனாய்வுத்துறையினரால் நேற்று மாலை கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
லேக் ஹவுசில் வேலை முடிந்து திரும்பிக்கொண்டிருந்தபோது நுகேகொட எம்புல்தெனிய சந்தியில் வெள்ளை வானில் வந்த ஆறு பேர் கொண்ட படைப் புலனாய்வுத்துறையினரால் நேற்று திங்கட்கிழமை மாலை 5:15 நிமிடமளவில் இவர் கடத்தப்பட்டார்.

கடத்தப்படும் சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் நின்ற மக்களிடம் உதவி செய்யுமாறு அவர் கோரியபோதும் அது பலனளிக்கவில்லை.

படைப் புலனாய்வுத்துறையினரால் வெள்ளை வானுக்குள் பலவந்தமாக தூக்கிப் போடப்பட்ட போத்தல ஜெயந்த, அதற்குள் இருந்த ஆறு பேர் கொண்ட குழுவினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அதுமட்டுமின்றி அவர் நீண்ட காலமாக வளர்க்கும் தாடி, மீசையையும் அவர்கள் வெட்டி எறிந்துள்ளனர்.

கடத்தப்பட்ட இடத்தில் இருந்து நீண்ட தூரம்வரை கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவரை வாகனத்திற்குள் கொண்டுசென்று கோத்தட்டுவ என்ற இடத்தில் தூக்கி எறிந்துவிட்டு சென்றுள்ளனர்.

கோத்தட்டுவ பகுதி மக்களால் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு இவர் கொண்டுவரப்பட்டு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். எனினும் இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்பு மற்றும் கால் பகுதிகளிலேயே அதிகளவான காயங்கள் இவருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்காவில் உள்ள அனைத்து இன ஊடகவியலாளர்களுடனும் எளிமையாக பழகும் இவர், ஊடகச் சுதந்திரத்திற்காக நீண்ட காலமாக பாடுபட்டு வருகிறார்.

இவரது செயற்பாட்டை கடந்த வருட இறுதியில் முடக்குவதற்கு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முயற்சித்தபோதும் அது கைகூடவில்லை.

குறிப்பாக, இவரது வீட்டிற்கு கடந்த வருட இறுதியில் சென்ற படைப் புலனாய்வுத்துறையினர் இவரை கடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சியும் அம்பலத்திற்கு வந்திருந்தது.

இந்நிலையிலேயே இவர் மீது மீண்டும் சிறிலங்கா அரச பயங்கரவாதம் பாய்ந்திருக்கிறது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.