Tuesday, June 2, 2009

நாளை இடம்பெறவுள்ள வெற்றிவிழாவை முன்னிட்டு கொழும்பில் பாரிய தேடுதல் நடவடிக்கைகள்

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் படையினர் பெற்றுக்கொண்ட வெற்றிகளை கொண்டாடுமுகமாக அரச வைபவங்கள் நாளை காலிமுகத்திடலில் கோலாகலமாக நடைபெறுகின்றது.

இந்த நிலையில் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும், பாதுகாப்புக்கள் என்றும் இல்லாதவகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சிறி லங்கா காவற்துறையினரும், இராணுவத்தினரும், கடற்படையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்வருகின்றனர்.

வீடுகள், வர்த்தக நிலையங்கள் நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் தங்கியுள்ளவர்கள் மற்றும் வாகனங்களில் பயணிப்போர் என சகல தரப்பினரும் பாதுகாப்பு பிரிவினரால், விசாரணகைளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நாளை இடம்பெறள்ள அரச வெற்றிவிழாவை முன்னிட்டே பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிப்படுத்தப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைகளின் பொருட்டு அயிரக்கணக்கான இராணுவத்தினரும், காவற்துறையினரும். விசேட அதிரடிப்படையினரும் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுக்காலை முதல், கொழும்பு, புறக்கோட்டை, கொள்ளுப்பிட்டி. பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளை கல்கிஸை, கொகுவளை, கொட்டாஞ்சேனை. நுகேகொட ஆகிய இடங்களில் சுற்றிவளைப்பு சோதனைகள் தொடர்கின்றன.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.