Tuesday, June 2, 2009

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஜோன்மேரி யூலியா, ஜனனி ஆகியோருக்கு பிரான்ஸ் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிப்பு

தமிழரின் சார்பில் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திரு ஜோன்மெரி யுலியா (பிரான்ஸ்) ஜனனி ஜனநாயகம் (பிருத்தானியா) ஆகியோருக்கு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, பிரான்ஸ் தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
பிரான்ஸில் தமிழர் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு. ஜோன் மெரி யூலியா அவர்கள் வெற்றிபெற தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு பிரான்ஸ் தனது வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறது.

கடந்த பலவருடங்களாக தமிழர்களின் விடுதலையில் தன்னை இணைத்து கொண்டு உழைத்து வரும் திரு. யூலியா அவர்கள் இன்று தோன்றியுள்ள இறுக்கமான நிலையில் தமிழர்களின் நீதியான போராட்டத்தை உலக அரங்கில் வலுவான நிலையில் உரைக்கும் முகமாக ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இவர் வரலாற்றுத்துறை ஆசிரியராக பணிபுரிந்துகொண்டு இருக்கும்போதே எமது நாட்டின் போராட்ட வரலாற்றை பிற சமூகத்திடம் கொண்டு செல்வதற்கு தனது மொழி அறிவையும், வரலாற்று அறிவையும் அர்பணித்துக் கொண்டவர். 83ல் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பை பிரஞ்சு மக்கள் அறியும் வகையில் பிரஞ்சு மொழியில் "ஜெனசிட் தமிழ்" என்னும் நூலை வெளிக்கொணர்ந்தார்.

அதேபோல் இங்கு பல அரசியல் பிரமுகர்களின் சந்திப்பில் எம்மினத்தின் விடிவிற்கான போராட்டத்தை ஆணித்தரமாக முன்வைத்து அவர்களின் ஆதரவையும், கவனத்தையும் எம் பக்கம் திருப்பியவர்.

இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் எமது நிலைப்பாட்டை தெரிவிக்க முன்வந்துள்ளார்கள். தமிழர்களாகிய நாம் அதற்கான ஆதரவை தெரிவித்து வெற்றிபெற செய்தல்வேண்டும்.

இன்று இலங்கையில் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் சுதந்திரமாக இயங்கமுடியாத நிலையில். புதிய அரசியல் சூழலில் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு, அவ்விடங்களில் தேர்தல் நடத்த சிங்கள அரசு திட்டமிட்டு வரும்நிலையில்,

எமக்கான அரசியல் பிரதிநிதிகளை எம்மால் தெரிவுசெய்ய முடியாத நிலையில் எமக்கான பிரதிநிதியை ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு புலம்பெயர்ந்த நாங்கள் தெரிவுசெய்து அனுப்பும் சந்தர்பம் எமக்கு கிடைத்துள்ளது. இதனை புலம்பெயர்ந்து வாழும் நாம் சரியாக உபயோகித்துக் கொள்வதினூடாக எமது சுதந்திரத்தை உறுதிசெய்ய முடியும்.

எம்மில் பலர் எத்தனையோ தேசிய கட்சிகளிற்கு ஆதரவாய் இருந்தாலும் எமது பொதுப் பிரச்சனையை முன்வைத்து ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு.யூலியா அவர்களை கட்சி பேதமின்றி ஆதரித்து எமது மக்களின் விடுதலையை முனைப்பு பெறவைக்க வேண்டும்.

இவரின் வெற்றிக்காக அனைத்து தமிழ்ச் சங்கங்களையும் ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொள்வதுடன் பிறநாட்டு நண்பர்களின்; ஆதரவையும் திரட்ட உழைக்கவேண்டுமென தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

இதே வேளையில் லண்டனில் போட்டியிடும் இளம்தலைமுறை செல்வி. ஜனனி ஜனநாயகத்தின் வெற்றிக்கும் எமது வாழ்த்துடன் கூடிய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு – பிரான்ஸ்

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.