நாட்டில் குறிப்பாக வடக்குப் பகுதியில் உள்ள அனைத்து ஆயுதக் குழுக்களினதும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டுமென புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு முன்னதாக துணை இராணுவக் குழுக்களினது ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க ஆயுதப் படையினரைத் தவிர்ந்த ஏனைய அனைத்து ஆயுதம் தரித்த குழுக்களினதும் அயுதங்கள் களையப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இயங்கி வரும் சில ஆயுதக் குழுக்கள் தொடர்ந்தும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதாக புளொட் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நடைபெறவுள்ள யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத்தேர்தல்களில் ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் சின்னமாகிய குத்துவிளக்குச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment