தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போராட்டத்தில் அடைந்த இராணுவ வெற்றியை கொண்டாடும் நிகழ்வுகளின் போது புலிகளின் ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட மாட்டாதென படைத்தரப்பு அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட பெருந்தொகை அதி நவீனரக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் எனினும் அவற்றை காட்சிப்படுத்த இது சிறந்த தருணமல்ல எனவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் காலி முகத்திடலில் மிகவும் கோலாகலமாக இந்த யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நாளைய தினம் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment