Wednesday, June 3, 2009

எமது நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஏனைய நாடுகள் சிபார்சு செய்யும் தீர்வுகளை செயற்படுத்த மாட்டோம்:ஐ.நா. சபை கூட்டத்தில் சமரசிங்க


எமது நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு வேறு எந்த நாட்டினது மாதிரிகளையும் நாம் பின்பற்ற மாட்டோம். ஏனைய நாடுகள் சிபார்சுசெய்யும் தீர்வுகளை செயற்படுத்த முனைய மாட்டோம். இவ்வாறு நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அவர் தமது உரையில் தெரிவித்த ஏனைய சில அம்சங்கள் வருமாறு:

இடம் பெயர்ந்தவர்களுக்கான மனிதாபிமான மற்றும் புனர்வாழ்வுப் பணிகளை முன் னெடுக்கவேண்டியுள்ள அதேவேளை, பிரிவினைக்கு புத்துயிர் கொடுத்து அது மீண்டும் தலையெடுக்கவிடாது தடுக்க வேண்டிய தேவையும் உண்டு.

அதன் பொருட்டு இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளைக் களையெடுக்க வேண்டிய அவசியமும் தேவையும் அரசாங்கத்திற்கு உண்டு. அதனை அரசு செய்து கொண்டே இருக்கும்.

எமது நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு வேறு எந்த நாட்டினது மாதிரிகளையும் நாம் பின்பற்ற மாட்டோம். ஏனைய நாடுகள் சிபார்சுசெய்யும் தீர்வுகளை செயற்படுத்த முனைய மாட்டோம். எமது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்புடைத்தான தீர்வே அவசியம்.

ஆகையால் எமது நாட்டில் அரசியல் பேச்சுக்களின் மூலம் உருவாக்கப்படும் தீர்வையே அமுல் செய்வோம். அதற்கான செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டன.தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கு ஏதுவாக நல்லிணக்க முறையிலான நட வடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.

முன்னாள் போராளிகளை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்தும் பொருட்டு எனது அமைச்சின் அனுசரணையில் நிபுணத்துவக்குழு ஒன்று விசேட திட்டத்தை வகுத்து வருகின்றது. நாட்டு மக்கள் சகலரையும் ஐக்கியப்படுத்துவதை இலக்காகக் கொண்டே இத்திட்டம் வகுக்கப்படுகின்றது. என்றார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.