Saturday, May 16, 2009

மலேசியா பல்கலைக்கழக தமிழ் மாணவன் கட்டுநாயக்காவில் காணாமல் போயுள்ளார்

வவுனியா வைரவப்புளியங்குளத்தைச் சேர்ந்த 21 வயதான ராஜரட்ணம் ராஜசேகரன் என்ற மலேசியா பல்கலைக்கழக தமிழ் மாணவன்  கடந்த 12 ஆம் திகதி முதல் கட்டுநாயக்காவில் வைத்து  காணாமல் போயுள்ளார் என முறையிடப்பட்டுள்ளது.

மலேசியா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவன் இரண்டு வார விடுமுறையில் வந்து வவுனியாவில் உள்ள பெற்றோருடன் தங்கியிருந்துள்ளார்.

 கடந்த 12 ஆம் திகதி திரும்பவும் கல்வியைத் தொடர்வதற்கு மலேசியா செல்வதற்காக கட்டுநாயக்க விமானத்தளத்திற்கு சென்றிருந்த பின்னரே காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.