Sunday, May 17, 2009

ஆயுதக் களைவுக்கு விடுதலைப் புலிகள் விருப்பம்: எரிக் சொல்ஹெய்ம்

தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மிடம் உள்ள ஆயுதங்களை களைவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்காவின் சமாதான முன்னெடுப்புக்களின் ஒருங்கிணைப்பாளருமான எரிக் சொல்ஹெய்ம், சுயாதீன மதிப்பீட்டுக் குழுவை போர் நடைபெறும் பகுதிக்கு அனுப்புவதே தமக்கு முன்னுள்ள தற்போதைய பணியாகும் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அனைத்துலக ஊடக நிறுவனமான ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.05.09) நான் பல தடவைகள் தொடர்பில் இருந்தேன். அனைத்துலக சமூகத்திடம் அவர்கள் தமது ஆயுதங்களைக் கையளிப்பதற்கு தயாராக உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

போர் இடம்பெறும் பகுதியில் உள்ள காயமடைந்தவர்களை அகற்றுவதற்காக அங்கு சுயாதீன மதிப்பீட்டுக் குழுவை அனுப்புவதே எமக்கு முன்னுள்ள பிரதான பணியாகவுள்ளது. அங்கே பலர் காயமடைந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் நிலை தொடர்பாக என்னிடம் புதிய தகவல்கள் ஏதும் இல்லை. புலிகளின் ஏனைய தலைவர்கள் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.