உலகின் முதன்நிலையான மிகப்பிரபலமான தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பினை, ஒருபோதுமே தோற்கடிக்கமுடியாது எனக் கருதப்பட்ட நிலையில், எமது முப்படையினரும் தம்மை அர்ப்பணித்து இன்று பயங்கரவாதிகளைப+ண்டோடு அழித்து பெரு வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளனர். இந்த வெற்றியானது இந்த நாட்டில் வாழும் சகல இனத்தவர்களுக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய நூலக ஆவணப்படுத்தல் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த நாட்டில் இந்தநாளே மிக மகிழ்ச்சியான தருணம் எனவும், தமிழீழவிடுதலைப்புலிகளை ஒழிக்கவேண்டும் என்ற தமது கனவு பலித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை முப்படையினருக்கும் இந்த நாடு கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதற்கு நன்றிக்கடனாக யுத்தத்திலே உயிர்தியாகம் செய்த படையினரின் பெயர்களை வடபகுதியில் உள்ள கிரமங்களுக்கு உத்தியோகபூர்மாகச் சூட்டவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment