சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையினை இலங்கைக்கு வழங்குவதற்கான சரியான தருணம் இது இல்லை என அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே ஹிலாரி கிளிண்டன் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரணடுத் தரப்பினரையும் யுத்தத்தை நிறுத்துவது தொடர்பில் இணக்கத்திற்கு கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.9 மில்லியன் பெறுமதியான கடன் தொகையினை பெற இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
ஏற்கனவே இந்த நிதித் தொகையினை தாமதப்படுத்துவது குறித்து அமரிக்கா தமது கருத்தினை வெளியிட்டிருந்தது.
எனினும் இந்த கடன் தொகையினை பெறுவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும் அதனை பெறுவதற்கான குழு ஒன்று அமெரிக்கா சென்றுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்திருந்தது. இந்த நிலையிலேயே ஹிலாரி கிளிங்டன் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்காளியாக செயற்படுகிறது.
அமெரிக்காவின் தீர்மானம் இந்த நிதியத்தின் இறுதி தீர்மானத்திலும் தாக்கம் செலுத்துவதோடு பெரும்பான்மை பலத்தினையும் அமெரிக்கா கொண்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் ஆதரவின்றி சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை இலங்கைக்கு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஹிலாரி கிளிங்டனின் இந்த கருத்து இலங்கைக்கு நாணய நிதியத்தின் கடன் தொகை இலங்கைக்கு கிடைப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இலங்கை அரசாங்கம் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரையில் இந்த கடன் தொகையினை வழங்குவது குறித்து பரிசீலிப்பதில் அர்த்தமில்லை என ஹிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment