அசாதாரணமான நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகள் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து இன்று ஐக்கிய நாடுகள் சபையில் விவாதிப்பது இந்து சமுத்திர பிரதேசத்தில் முக்கியத்துவம் பெறுவதாக டெக்கான் ஹெரல்ட் செய்திதாள் பாகிஸ்தானிய ராஜதந்திரி ஒருவரை கோடிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. |
இந்தியா சீனா ரஸ்யா பாகிஸ்தான் மலேசியா இந்தோனிசியா கியூபா எகிப்துபொலிவியா போன்ற நாடுகள் இந்த விவாதிப்பின் போது இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளன. சபையின் 47 நாடுகளில் கனடா ஜேர்மனி இத்தாலி பிரித்தாணியா உட்பட்ட அமரிக்காவின் சார்பு 17 நாடுகள் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டைகொண்டுள்ளன. தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் போது இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை இந்த நாடுகள் முன்வைத்துள்ளன. எனவே அது தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என இந்த நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. எனினும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றிப்பெற்று விட்டதாகவும் எனவே நாட்டை கட்டியெழுப்ப நிதியுதவி வேண்டும் என்றும் தமது எதிர்ப்பு யோசனையை முன்வைக்கவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அமர்வாக இன்று நடைபெறும் அமர்வு போல ஏற்கனவே பத்து அமர்வுகளே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. ரஸ்யா சீனா போன்ற நாடுகள் அமரிக்காவின் ஆதிக்கம் இந்து சமுத்திர நாடுகளுக்கு வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றன. இவை இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டை தொடர்ந்தும் எதிர்த்தே வந்துள்ளன. சீனாகடந்த ஆண்டில் மாத்திரம் இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர்களை வழங்கியதுஇது அமரிக்கா மற்றும் பிரித்தாணியா ஆகிய நாடுகள் கடந்த ஆண்டில் இலங்கைக்கு வழங்கிய 7.4 மில்லியன் மற்றும் 1.25 மில்லியன் டொலர்களுக்கு சமனானதாகும். இலங்கை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு இரட்டை போக்கை கொண்டதாகும். சீனாவின் பிரசன்னத்தை இலங்கையில் குறைப்பதற்காக இலங்கைக்கு அது பொருளாதாரபாதுகாப்பு மற்றும் அரசியல் ரீதியில் உதவி வருகிறது. அத்துடன் இலங்கையின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்றும் கோரி வருகிறது எனினும் சீனா இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைப்பதன் மூலம் பாகிஸ்தான் பங்களாதேஸ் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் ஊடாக பாரிய வர்த்த முனைப்பை கொண்டுள்ளது. |
Tuesday, May 26, 2009
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் இந்து சமுத்திர பிரதேசத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment