Friday, May 8, 2009

புலிகளுக்கு எதிரான போரில் எந்த ஆயுதப் பாவனைக்கும் தடை இல்லை": கோத்தபாய அறிவிப்பு




வடபகுதியில் இடம்பெறும் போரில் விடுதலைப் புலிகளின் தடைகளைத் தகர்த்து முன்னேறுவதற்கு சிறிலங்கா படையினர் எந்தவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்துவார்கள். அந்தவிடயத்தில் அவர்களுக்கு எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்படவில்லை" என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.
"விடுதலைப் புலிகளைத் தாக்குவது என்பது வேறு. அப்பகுதியில் உள்ள மக்களை மீட்பது என்பது வேறு. இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் வெவ்வேறான ஆயுதங்களைத்தான் படையினர் பயன்படுத்துவார்கள். அத்துடன், இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் வெவ்வேறான இராணுவ உபாயங்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்" எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டிருக்கின்றார்.

சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சியான 'ரூபவாஹினி'யில் இடம்பெற்ற பேட்டியொன்றிலேயே இந்தத் தகவல்களை அவர் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் மேலும் முக்கியமாக குறிப்பிட்டிருப்பதாவது:

"போர் நடைபெறும் பகுதியில் உள்ள மக்களை குறைந்தபட்ச இழப்புக்களுடன் மீட்பதுதான் எமது நோக்கமாகும். நாடு, அரசு என்ற வகையில் எமக்கு பொறுப்பு உள்ளது. பொதுமக்களைக் கொன்று இதனைச் செய்ய முடியாது. இந்தவிடயத்தில் வெளிநாடுகளின் தலையீடுகள் பற்றியும் கவனத்தைச் செலுத்த வேண்டியிருக்கின்றது. இவ்வாறான தலையீடுகளை ஏற்படுத்தும் நோக்கிலேயே விடுதலைப் புலிகளும் தங்களுடைய இணையத் தளங்களில் படங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

போர் முனையில் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வதற்கான அனைத்தையும் நாம் செய்யும் அதேவேளையில் இந்தத் அந்நியத் தலையீடுகளைத் தவிர்த்துக்கொள்வதற்கும் வழிவகைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. இதன் காரணமாகவே கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற அறிவிப்பை அரச தலைவர் வெளியிட்டார். இருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் மண் அணைகள் மற்றும் பதுங்குகுழிகளைத் தகர்ப்பதற்கு அவர்களுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.

அரச தலைவர் மற்றும் முப்படையினர் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். ஊடகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் அனைத்துலக சமூகம் என பலர் உரத்துக் குரல் கொடுத்தாலும் நாம் ஒரே நம்பிக்கையுடன் செயற்பட்டதால்தான் எம்மால் இங்கு வர முடிந்தது. எந்த நம்பிக்கையுடன் தொடர்ந்தும் இருந்தால்தான் ஏனைய பகுதிகளையும் மீட்டெடுத்திருக்க முடியும்" என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.