Saturday, May 23, 2009

இலங்கையில் போர்க் குற்றம் தொடர்பாக ஜ.நா மனித உரிமைக்கழகம் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது

25-05-2009 திங்கட்கிழமை  ஜ.நா மனித உரிமைக் கழகத்தால் இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெற்றதா என விசாரணை நடத்தப்பட இருந்தது.

ரஷ்ய மற்றும் சீனாவின் தலையீட்டால் இது தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கழகத்தில் நிரந்தர அங்கத்துவம் வகிக்கும் 45 நாடுகளில் 17 நாடுகள் ஆதரவாக வாக்களிக்கும் பட்சத்தில்இ இது மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்படும் நிலை இருந்தது. 

இதனையடுத்து விரைவாகச் செயல்பட்ட அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் தமக்கு ஆதரவான 15 நாடுகளுடன் உடனடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுஇ தற்போது அந் நாடுகள் இணங்கிய காரணத்தால் செவ்வாய்கிழமை மீண்டும் சபையைக்கூட்டி ஆராயத் தீர்மானித்திருப்பதாக சற்று முன்னர் தகவல் கிடைத்துள்ளது. 

மேலும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு தனது அதி கூடிய தொழில்நுட்ப செய்மதி கொண்டு 16ம் திகதி முதல் 19ம் திகதிவரை நடந்த மிக முக்கிய உக்கிரமோதலை படம் பிடித்துள்ளது. இவை தற்போது ஆராயப்படுவதாகவும்இ அந்த அறிக்கையை செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் சமர்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கையில் போர்குற்றம் குறித்து செவ்வாய்கிழமை காத்திரமான முடிவு எடுக்கப்படலாம் என நம்பப்படுகிறது. அனைத்துத் தமிழ் உறவுகளும் காத்திருங்கள் இது குறித்த மேலதிக செய்திகளை நாம் செவ்வாய்கிழமை பிரசுரிப்போம். 

அத்துடன் இத் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கும் நாடுகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது. 

Argentina, 
Bosnia and Herzegovina, 
Canada, 
Chile, 
France, 
Germany, 
Italy, 
Mexico, 
Mauritius, 
the Netherlands, 
the Republic of Korea, 
Slovakia, 
Slovenia, 
Switzerland, 
Ukraine, 
the United Kingdom.
Uruguay.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.