தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும், விடுதலைப் புலிகளின் தலைவருமான பிரபாகரன் அவர்கள் வீரமரணம் அடைந்தார் என்று செய்திகள் வெளியானதால் அதிர்ச்சி அடைந்த கடலூர் மாவட்டம் - குறிஞ்சிப்பாடி ஒன்றிய மறுமலர்ச்சி தி.மு.க. அவைத் தலைவரான 50 வயது நிரம்பிய பிரகாசம் எனும் கழகத் தோழர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். உடனடியாக அவர் பாண்டிச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
ஏடுகளிலும், ஊடகங்களிலும் வெளியாகி இருக்கின்ற செய்திகளால் உலகெங்கும் வாழும் தமிழர்கள் சோகக் கடலில் ஆழ்ந்துள்ள நிலையில் உலக மகா வீரன் பிரபாகரன் அவர்களைப் பற்றி வெளியாகி உள்ள செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், தீக்குளிக்கின்ற முயற்சிகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்..
No comments:
Post a Comment