கொழும்பில் இன்று வெறித்தனமாக அலைந்து திரியும் சில பேரினவாதக் கும்பல்கள் தமிழ் மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
தமிழ் வர்த்தகர்களிடம் சென்று தேசிய கொடியை கடைகளில் கட்டுமாறு இவர்கள் அச்சுறுத்துவதாகவும் வெள்ளவத்தையில் சில தமிழ் இளைஞர்கள் தாக்கப்பட்டிருப்பதாகவும் எமது கொழும்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் வீதிகளில் அதிகம் செல்வதை தவிர்த்து தமிழர்கள் பலர் வீட்டில் முடங்கிக் கிடப்பதாகவும் தெரியவருகிறது. ஒருவித அச்சம் கலந்த சூழல் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.
இதேபோன்ற நிலை மட்டக்கிளப்பிலும் காணப்படுவதாக கூறப்படுகிறது. கொழும்பில் வீதீயால் செல்லும் தமிழர்கள் மீது தண்ணீரை ஊற்றி கேலிசெய்வதாகவும், இனி உங்களுக்கு யார் இருக்கிறார்கள் , புலிகள் முற்றாக அளிக்கப்பட்டு விட்டதாக சிங்கள காடையர்கள் கூறுவதாகவும் அறியப்படுகிறது.
கொழும்பில் சில தமிழ்கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்துவிட்டும்,சாப்பாட்டுகடைகளில் பணம் செலுத்தாமலும் சிங்களவர் நடந்துகொள்கின்றனர்.
No comments:
Post a Comment