Thursday, May 7, 2009

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் யுத்தநிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை: அரசாங்கம் அறிவிப்பு


இலங்கை யுத்த விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விடுத்திருந்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஸ்ரீ ரவிசங்கருடன் இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசத் தயாராக இல்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என உயர் அரசாங்க அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

வாழும் கலைப் பயிற்சி நிறுவனம் மக்கள் மனதில் பிழையான கருத்துக்களை ஏற்படுத்தக் கூடாது என அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

வாழும் கலைப்பயிற்சியின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒரு தடவை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒருபோதும் யுத்த நிறுத்தமொன்றுக்கு செல்லத் தயாரில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

யுத்த நிறுத்தமொன்றை ஏற்படுத்த மத்தியஸ்தம் வகிக்குமாறு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.