Saturday, May 9, 2009

வன்னிப் படைத் தளபதிகளுடன் இராணுவ தளபதி இன்று சந்திப்பு

இன்று சனிக்கிழமை வவுனியாவிலுள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்த இராணுவ தளபதி லெப். கேணல் சரத் பொன்சேகா வன்னிப் படைத் தளபதிகளுடன் தற்போதைய களமுனை நிலைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய இராணுவ தளபதியை வரவேற்றுற்றுள்ளார்.

அதன்பின்னர் வன்னிக் கூட்டுப்படை தலைமையகத்தில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் யுத்தமுனையிலுள்ள இராணுவ தளபதிகளுடன் தற்போதைய சமர்க்கள நிலைப்பாடுகள் பற்றி விரிவாக ஆராய்ந்ததாகவும், எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி சில உத்தரவுகளை இராணுவ தளபதி பிறப்பித்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.