இவ்வேளையில் எங்கள் தாயக உறவுகளுக்கு ஒரு விடிவுகானும்வரை புலம்பெயர் நாடுகளில் தமிழ் இளையோர் நாட்க்ள கடந்து மாதங்களை கடந்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.உண்ணாநிலை போராட்டம் இன்று சனிக்கிழமை சிட்னியில் Regent Park ல் உள்ள துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் தொடர்கிறது.
உலகின் குறிப்பிடத்தக்க நாடுகள் கோரிக்கை விடுத்தும் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றவாறு கோரத் தாக்குதல்களை நடத்திவரும் சிறிலங்கா அரசின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளால் எமது தாயக உறவுகள் பதுங்கு குழிகளில்தான் வாழ்க்கை என்று வாழ்ந்துகொண்டும் சமகாலத்தில, உயிர் இழப்புக்களையும் பட்டினி, மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகள் யாவுமே அற்ற நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 90 நாட்களில் மட்டும் 7000க்கு மேற்பட்ட மக்கள் உயிர் இழந்தது மட்டும்லாமல் 14000க்கு மேற்பட்டோர் காயம் அடைந்து முழுமையான மருத்துவ வசதியின்றி அல்லல்படுகிறார்கள்.
இவ்வேளையில் எங்கள் தாயக உறவுகளுக்கு ஒரு விடிவுகாணும்வரை புலம்பெயர் நாடுகளில் தமிழ் இளையோர் நாட்க்ள கடந்து மாதங்களை கடந்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே இரு வாரங்களுக்கு முன்பு 6 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து அவுஸ்திரேலியா அரசின் உறுதி மொழிகளுக்கு அமைய உண்ணாநிலையை நிறுத்திய இளைஞர்களில் ஒருவரான சுதா தனபாலசிங்கம் 150 மணித்தியாலங்களை கடந்து தனது உடலை வருத்தி எமது தாயக உறவுகளின் விடிவிற்காக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
உண்ணாநிலை போராட்டம் இன்று (9.05.09) சிட்னியில் Regent Park ல் உள்ள துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் தொடர்கிறது.
எங்கள் தாயக உறவுகளையும் சுதாவின் உயிரையும் காப்பாற்றுவதற்காகவும் சிறீலங்கா வன்முறை அரசை சர்வதேச அரங்கிலிருந்து தனிமை படுத்துவதாகவும் திரலாக வந்து எமது தாய் நாட்டிற்கான கடமையை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கன்பராவில் தமிழர் உரிமைப் போராட்டம்
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணிக்கு Binnalong Park Tonngabbie ல் இருந்து மகிழுந்து ஊர்வலம் தலைநகர் கன்பராவை நோக்கி உரிமையை நிலைநாட்டுவதற்காக பயணிக்கின்றது.
அன்பார்ந்த எம் தமிழ் உறவுகளே! இந்த உரிமைப் போராட்டத்தில் கலந்துகொண்டு தாயகத்தில் சிங்கள அரசின் கொலைக்களத்தில் சிக்கி இருக்கும் எம் மக்களின் உயிர்களைக் காப்பாற்றவும் உரிமையை நிலைநாட்டவும் அவுஸ்திரேலிய பாரளுமன்றத்தின் முன் அணிதிரண்டு வாரீர்.
மகிழுந்தில் (Car) இணைக்கக்கூடிய அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடிகளை பெற்றுக்கொள்ளவும் உங்கள் மகிழுந்துகளின் பதிவு இலக்கங்களை கொடுக்கவும் எதிர்வரும் தொலைபேசி எண்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்:
அரவிந்த்: 0434 497 085
கார்தீபன்: 0433 844283
கீதா: 0433 452 981
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
No comments:
Post a Comment