Friday, May 15, 2009

ஐ.நா. முன்றலில் மாபெரும் ஒன்றுகூடல்

எம் தாயக மண்ணில் சிறீலங்கா அரச படையின் எரிகுண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் பட்டினியாலும் வதைக்கப்படும் எம் உறவுகளை அழிவில் இருந்து மீட்போம்.
சர்வதேசமே எமது மக்களைக் காப்பாற்ற உனக்கு நாம் விடும் இறுதி அறைகூவல். 

ஐரோப்பிய தமிழர்களே! வாருங்கள் ஐ.நா. வை நோக்கி புறப்படுங்கள். ஒட்டுமொத்த சுவிஸ் மக்களும் உங்களுக்கு உணவு தந்து உறங்க இடம் தந்து உங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வார்கள். 

தயக்கம் வேண்டாம் உடனே புறப்படுங்கள். எமது தாயகம் பறி போன பின்பு எமது உறவுகள் அழிந்த பின்பு நாம் இங்கு கூடி அழுது புலம்புவதில் எந்த பயனும் இல்லை. அந்த நிலை வரும் முன் அவர்களை காப்போம். 

எதிர்வரும் மே18 திங்கள் ஐ.நா.வின் அனைத்து அங்கத்துவ நாடுகளும் ஒன்றுகூடுகிறார்கள். அதே நாள் காலை 10:30 மணிக்கு மக்கள் வெள்ளத்தால் ஐ.நா. முற்றம் மூழ்கட்டும். மூடிக் கிடக்கும் சர்வதேசத்தின் கண்கள் திறக்கட்டும். 

காலை 10:00 முதல் அரச அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே தவறாது குறித்த நேரத்துக்கு சமூகம் தரவும். 

- தமிழ் இளையோர் அமைப்பு - சுவிஸ் 


அன்பான தமிழ் உறவுகளே! சுவிஸ் நாடாளுமன்றம் முன்பாக தொடர் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.