வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து தென்மராட்சி இராணுவத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளம் பெண் ஒருவர், தெல்லிப்பழை தடுப்பு முகாமிற்கு இராணுவத்தினரால் மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவப் பயிற்சிகளை வழங்கியுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இராணுவத்தினர் அவரை முகாம் மாற்றம் செய்துள்ளனர்.
எனினும், அவரது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மேற்கொண்ட பாரிய ஆர்ப்பாட்டங்களின் பின்னர், அவர் மீண்டும் அதே முகாமிற்கு அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் ஏற்கனவே இந்த முகாமில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் தொடர்ந்தும் தெல்லிப்பழை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment