Sunday, May 24, 2009

ஜனாதிபதியை படுகொலை செய்ய இராணுவ லெப்டினன்ட் ஒருவர் முயற்சி செய்துள்ளதாக தகவல்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்ய இராணுவ லெப்டினன் ஒருவர் புலிகளுடன் இணைந்து முயற்சி மேற்கொண்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு விடுதலைப்புலிகளின் தாக்குதல்களுடன் குறித்த இராணுவ லெப்டினட்னுக்கு நேரடித் தொடர்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
பல்வேறு சந்தர்ப்பங்களில் இராணுவ சிப்பாய் போன்று உடையணிந்த தற்கொலைக் குண்டுதாரிகளை இராணுவ லெப்டினன்ட் ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
எனினும், இந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
அண்மையில் கைது செய்யப்பட்ட சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த உண்மைகள் தெரியவந்துள்ளன.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.