Sunday, May 24, 2009

சிறிலங்காவின் போர்க் குற்றங்களை உடனடியாக விசாரிக்கவேண்டும் - அமெரிக்க காங்கிஸ்

இலங்கையில் போர் முற்றிய போது சர்வதேச சமூகத்துக்கு மறைக்கப்பட்டு நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவும் அவற்றை வழிநடத்திய சிறிலங்கா அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, அவரின் ஆலோசகர் பசில் ராஜபக்ஸ இராணுவக் கட்டளைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் மிக உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்களான ரொம் லொண்டோஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்குக் கடிதம் மற்றும் மின்னஞ்சல் ஊடாக வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இம்மின்னஞ்சலில் ஐ.நா இன் அமெரிக்கத் தூதர் 'சூசன் ரைஸ்' மூலம் பாதுகாப்புச்சபையில் சிறிலங்கா நிலவரம் பற்றி விவாதிக்க அவசர அழைப்பை விடுவிக்குமாறும் கேட்டுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கம் அதன் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு எந்த அரசியல் விலையையும் கொடுக்கத் தேவையில்லை என்று நம்பிக்கொண்டிருப்பதாகவும் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதர் 'ரொபெர்ட் பிளேக்' உட்பட பிரிட்டன், நோர்வே, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளையும் அவமதிக்கும் வகையில் சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கை மீதான அவர்களது வேண்டுதல்களைப் புறக்கணித்துள்ளதாகவும் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் முன்னிலையிலேயே ஜனாதிபதி ஒபாமா அமெரிக்காவின் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை நிர்வாகியிடம் சிறிலங்காவுக்கு நிதியுதவி (1.9 பில்லியன்) வழஙங்குவதற்கு எதிராக வாக்களிக்குமாறு அறிவுறுத்துமாறும் அந்த மின்னஞ்சலில் கேட்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.