ஐக்கிய நாடுகளினால் இன அழிப்புக்கு எதிராக 1948ம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்ட சரத்துக்களுக்கு முரணான வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமெரிக்க இல்லினோய்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பொய்லி தெரிவித்துள்ளார்.
சுமார் 300,000 த்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ்ப் பொதுமக்களை நாசி வதை முகாம்களில் நடத்துவதனைப் போன்று இலங்கை அரசாங்கம் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்ட வகையில் இலங்கை அரசாங்கம் இன அழிப்பினை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் இன அழிப்பு குறித்த பிரகடனத்திற்கு அமைவாக இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு இந்தியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும் இந்த நாடுகள் தமிழர் இன அழிப்பிற்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment