Friday, May 29, 2009

வவுனியா முகாம்களுக்கு தினமும் ஒரு நாளைக்குரிய உணவு மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் தேவை

வடபகுதியில் நடைபெற்ற மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 3 இலட்சம் மக்களுக்கான ஒரு நாளைக்குரிய உணவு மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் (11 கோடியே 30 இலட்சம் ரூபா) நிதி தேவைப்படுவதாக "வேள்ட் விசன்' தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக "வேள்ட் விஷன்' நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் சுரேஷ் பார்ட்லட் தெரிவிக்கையில்; 

நிவாரண உதவிகளை வழங்கும் அமைப்புகளுக்கு நிதிஉதவி தற்போது பாரியதொரு பிரச்சினையாக உள்ளது. 

ஏற்கனவே வழங்கப்பட்ட நிதிஉதவிகள் முன்னரே திட்டமிட்ட செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டுவிட்டநிலையில் தற்போது நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

இந்நிதிஉதவியை இலங்கைக்கு வழங்குவதா இல்லையா என்பது குறித்த அரசியலில் உலக நாடுகள் ஈடுபடக்கூடாது. 

ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்களில் சிறுபிள்ளைகள் பெருமளவில் உள்ளனர். அவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

மோதலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான தேவை உள்ளது. அம்மக்கள் மீளக் குடியமர்த்தப்படவேண்டியவர்கள். 

இம்மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பலமில்லியன் டொலர் நிதி உதவி தேவைப்படுகிறது. 

சர்வதேச சமூகத்தின் ஆதரவில்லாமல் இம்மக்களுக்கான உதவித் திட்டங்கள் எதனையும் முழுவளவில் செயற்படுத்த முடியாது. 

இலங்கையில் நடைபெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை மேற்கொள்வதற்கும் வன்முறையற்ற இலங்கையை உருவாக்குவதற்கும் பங்களிப்புச் செய்வதற்கு சர்வதேச சமூகத்திற்கு இது ஒர் அரிய சந்தர்ப்பம் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.