Thursday, May 7, 2009

முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளைமுல்லி வாய்க்கால்ப் பகுதியில் பாரிய மோதல் தொடர்கிறது

முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளைமுல்லி வாய்க்கால்ப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடுமையான யுத்தம் தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றுப் பின்னிரவு குறிப்பாக இன்று அதிகாலை முதல் தொடருகின்ற கடுமையான மோதலில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட பாரிய மண் அணை உடைக்கப்பட்டு படையினர் வெள்ளைமுல்லி வாய்க்கால் பகுதியின் உட்பகுதிக்குள் பிரவேசித்ததாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

எனினும் முதலாவது அணை உடைக்கப்பட்ட பொழுதிலும் இரண்டாவது பாரிய மண் அணையை உடைப்பதில் படையினர் பாரிய எதிர்த் தாக்குதலை எதிர்கொள்வதாகவும் இலங்கை நேரம் இன்றுமாலை வரை இரண்டாவது அணையை உடைப்பதில் பாதுகாப்புத் தரப்புத் தோல்வி கண்டுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெள்ளைமுல்லிவாய்க்கால் பகுதியில் முன் அரணை உடைத்து முன்னேறிய படையினருக்கெதிராக விடுதலைப்புலிகள் நடத்திய பாரிய தாக்குதலில் படையினர் மீண்டும் பின்னோக்கி நகர்ந்ததாகவும் பின்னோக்கிய தளங்களில் இருந்து தாம் உள் நுழைந்த பகுதியைக் கைப்பற்றுவதற்கு மீண்டும் தாக்குதலை படையினர் தொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில் இன்று மாலை வரை இரு தரப்பினரும் முன்னேறுவதும் பின்நகர்வதுமான தள்ளுமுள்ளுக்குள்ளான நிலையில் தாக்குதல்களைத் தொடர்வதாகவும் சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் இருதரப்பிலும் வெளியாகவில்லை எனவும் தெரிகின்றது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.