Saturday, May 16, 2009

ஐ.நா. அலுவலக பேச்சாளரின் நுழைவு அனுமதியை நீடிக்கப்போவதில்லை: சிறிலங்கா


சிறிலங்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் பேச்சாளர் கோடன் வைசின் நுழைவு அனுமதியை நீடிக்கப்போவதில்லை என்ற முடிவை சிறிலங்கா அரசு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

பாதுகாப்பு வலயத்தின் மீது கடந்த 10 ஆம் நாள் நடத்தப்பட்ட மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பெருமளவான மக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு ஒரு இரத்தக்களரி ஏற்பட்டுள்ளதாக ஐ.நாவின் கொழும்பு வதிவிடப் பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்த கருத்துக்கள் சிறிலங்கா அரசை சீற்றமடைய வைத்துள்ளது.

எனவே, அவரை நாடு கடத்துவதற்கு அரசு முயற்சித்திருந்தது. ஆனால், அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனால் அவரின் நுழைவு அனுமதியை மேலும் நீடிப்பதில்லை என்ற முடிவை சிறிலங்கா அரசு எடுத்துள்ளது.

இதனிடையே கடந்த செவ்வாய்கிழமை ஐ.நாவின் கொழும்பு அலுவலகத்தின் பிரதி பிரதிநியான அமின் அவாட்டை அழைத்த சிறிலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சு கோடன் வைஸ் இன் அறிக்கை தொடர்பாக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.