Monday, May 4, 2009

புலிகளிடம் தற்போது விமானங்கள் எதுவும் இல்லை; படையினர் தெரிவிப்பு



முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மிகவும் சுருங்கிப்போயுள்ள நிலையில் அவர்கள் வசம் விமானங்கள் எதுவுமில்லையென படைத்தரப்பு தெரிவித்துள்ளது.


நேற்று முன்தினம் சனிக்கிழமை கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் படையினர் விமானக் குண்டொன்றை கண்டுபிடித்ததாகவும் இது புலிகளின் விமானங்கள் தாக்குதலை நடத்தும் ரகத்தைச் சேர்ந்த குண்டெனவும் படைத்தரப்பு கூறியது.

இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்ட போதும் தற்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அவர்களிடம் விமானங்கள் எதுவும் இருப்பதற்கான சாத்தியங்களில்லையெனவும் படைத்தரப்பு தெரிவித்தது.

இதேநேரம், கடந்த மாதம் 18 ஆம் திகதி முல்லைத்தீவு முதலியார்குளம் பகுதியில் நடைபெற்ற தேடுதலின் போது புலிகளின் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எட்டுக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் படையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் தங்கள் வசம் இலகுரக விமானமொன்றை வைத்திருக்கும் சாத்தியங்களிருப்பதாகவும் சில ஊடகங்கள் கூறியிருந்தன. எனினும் அதனைப் படையினர் மறுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.