Tuesday, May 19, 2009

விடுதலைப் புலிகள் இறந்த பின்னரும் அவர்களைக் காட்டிக் கொடுத்த ‘பெருமை’யைப் பெற்றுள்ளார் கருணா

விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் உடல்களை, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி அரசுப் படைகளுக்கு ஆதரவாக மாறி, புலிகள் வலுவிழக்க முக்கிய காரணமாக இருந்த கருணாதான் அடையாளம் காட்டியுள்ளார்.

இதன் மூலம் புலிகளின் இறந்த உடல்களையும் காட்டிக் கொடுத்தவர் என்ற ‘பெருமை’ அவருக்குப் போய்ச் சேர்ந்துள்ளது.

விடுதலைப் புலிகள் குறித்து இலங்கை ராணுவத்திடம் முழுமையான தகவல்கள் இல்லை. முன்னாள் புலிகள் இயக்கத்தினரை வைத்துத்தான் பிடிபட்டவர்களையும், கொல்லப்பட்டவர்களையும் அவர்கள் அடையாளம் கண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை நடந்த சண்டையில் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளைக் கொன்றதாக ராணுவம் அறிவித்தது. இந்த சண்டையின்போது பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி உள்ளிட்டோரும் கொல்லப்பட்டதாக அது கூறியது. இவர்களில் பிரபாகரன் இறந்தது குறித்து குழப்பச் செய்திகளை வெளியிட்டது இலங்கை ராணுவம் .

இந் நிலையில் நேற்று கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் உடல்களை அடையாளம் காணும் பணியில் கருணாவை ஈடுபடுத்தியுள்ளது இலங்கை ராணுவம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கருணா ஒவ்வொரு உடலையும் அடையாளம் காட்டி, அது யார், என்ன என்ற விவரத்தை ராணுவத்திற்குத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் விடுதலைப் புலிகள் இறந்த பின்னரும் அவர்களைக் காட்டிக் கொடுத்த ‘பெருமை’யைப் பெற்றுள்ளார் கருணா.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.