Tuesday, May 5, 2009

புதுவகையான பல்குழல் எறிகணைத் தாக்குதல் பொது மக்கள் உடல் கருகிச் சாவு

இன்று (05.05.2009) அதிகாலையில் நாசகார பல்குழல் எறிகணைகளை இலங்கை இராணுவம் பயன்படுத்தியுள்ளது. இந்த எறிகணைகள் வீழ்ந்த இடமெங்கும் வெள்ளை நிறத்தில் நெருப்பு எரிந்ததாகவும், முள்ளிவாய்கால் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்பு மீது இந்த எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததால் பல பொதுமக்கள் அந்த இடத்திலேயே உடல் கருகி இறந்ததாகவும் அறியப்படுகிறது.

இத் தாக்குதல் நள்ளிரவில் இருந்து ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது. பலரது உடல்கள் கருகிய நிலையில் காணப்படுவதாகவும், மேலும் பலர் எரிகாயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த எறிகணைகள் வீழ்ந்து வெடித்த போது மிகப்பிரகாசமான வெள்ளை நிற தீப்பிழம்பு தோன்றியதாக மக்கள் தெரிவித்துள்ளனர். முன்னர் எப்போதும் பாவிக்காத புதுவகையான நாசகார எறிகணைகளை இலங்கை இராணுவம் இன்று பாவித்திருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் இன்று மதியம் சுமார் 20 கொத்தணிக் குண்டுகள் விமானப்படையினரால் வீசப்பட்டதாகவும் அறியப்படுகிறது. இதன் சேதவிபரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.