இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரே வழி அனைத்து சமூகங்களையும் திருப்திப் படுத்தக் கூடிய ஓர் அரசியல் தீர்வுத் திட்டமே என ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஜப்பான் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடபகுதியில் பெருந் தொகையான அப்பாவி பொதுமக்கள் பெரும் அவலங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக உக்கிர மோதல்களின் காரணமாக பொதுமக்கள் இழப்புக்கள் நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன்களை பலவந்தமாக தடுத்து வைக்கக் கூடாது எனவும், இலங்கை அரசாங்கம் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் சர்வதேச மனிதாபிமான சட்ட திட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் செயற்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதல் இடம்பெற்று வரும் வலயங்களுக்கு தொண்டு நிறுவன ஊழியர்களை அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள கோரிக்கைக்கு தாம் பூரண ஆதரவவளிப்பதாக மாநாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment