Sunday, May 3, 2009

நிவாரண நிலையங்களில் இருந்து வயோதிபர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவு


இடம் பெயர்ந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளவர்களுக்கான நிவாரன நலன்புரி நிலையங்களில் வயோதிபர்கள் போசாக்கு இன்மையாலும் சீரான கவனிப்பு இல்லாமை காரணமாகவும் 30 மரணங்கள் சம்பவித்துள்ளமை தொடர்பாக 30 வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ள வவுனியா மாவட்ட நீதிமன்றம் வயோதிபர்களை முகாம்களில் இருந்து உடனடியாக விடுவிப்பதற்கு அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
நலன்புரி நிலையம் ஒன்றில் மரணம் அடைந்த வயோதிபர் ஒருவர் தொடர்பாக வவுனியா மாவட்ட நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட ஏஃ827ஃ9 என்ற இலக்கமுடைய வழக்கு தொடர்பான விசாரனைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதி மன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் நடத்திய விசாரனைகள்,

மற்றம் இறங்தவரின் மரணத்திற்கான காரணம் தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள வைத்திய அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இறந்த வயோதிபரின் மரணம் ஒரு பட்டினி மரணம் என்ற ஒரு முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது என தெரிவித்துள்ள நீதி மன்றம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 மரணங்கள் இந்த நலன்புரி நிலையங்களில் இடம்பெற்றுள்ளமை தொடர்பாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது .

செட்டிகுளம் பகுதியில் உள்ள இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களில் கடந்த மாதம் 14 வயோதிபர்களுடைய மரணம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 மரணங்கள் சம்பவித்திருப்பதாகவும் நீதி மன்றத்தன் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26 திகதி கதிர்காமர் நிவாரண கிராமத்தில் மரணம் அடைந்த மூவரின் சடலங்கள் 6 மணித்தியாலங்களுக்கு மேல் அங்கிருந்து அகற்றப்படாமல் இருந்ததாகவும் நீதிமன்றம் கூறி இருக்கின்றது.

இவ்வாறு இறந்தவர்களின் உடல்கள் அகற்றப்படாமல் இருப்பதால் அந்த சூழலில் தொற்று நோய் ஏற்பட கூடிய அபாயம் ஏற்படுவதுடன் இறந்தவர்களின் உடலை அகற்றி அது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அதிக செலவு ஏற்படுவதாகவும் நீதி மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது

மூத்த குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும், பெண்கள் சிறுவர்கள் வயோதிபர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என சட்டம் கூறுகிறது ஆகவே இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் விபரங்கள் பதிவு செய்து வைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தொடர்பான சம்பவங்களின் போது உடனடியாக விபரங்களை பெறக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையங்களில் இருக்கின்ற, உறவினர்கள் இல்லாதவர்களையும் நோயாளரர்களையும் சீராக பராமரிப்பதற்கு வசதியாக, முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது .

அத்துடன் உறவினர்கள் வெளியில் இருப்பார்களேயானால் அவர்களை உறவினர்களுடன் சென்று வசிப்பதற்காக வசதியாக இந்த நிலையங்களில் இருந்து வயோதிபர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரச அதிகாரிகளுக்கான இந்த உத்தரவில்; நீதிமன்றம் தெரிவித்துள்ளது நீதி மன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 5 ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்கபட வேண்டும என்றும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.