யுத்தம் நிறைவடைந்த போதிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எவ்வித தளர்வும் காணப்படாதென காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாதென குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் வடக்கிலிருந்து தப்பி வந்த புலி உறுப்பினர்கள் வேறும் பிரதேசங்களில் ஊடுறுவியிருக்கக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தொடர்ச்சியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment