Thursday, May 14, 2009

கோத்தபாயமீதான தற்கொலைத்தாக்குதல் தொடர்பான பிரதான சந்தேகநபர் வவுனியா நலன்புரிமுகாமில் கைது!

சிறி லங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மீதான தற்கொலைத்தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக தேடப்பட்டுவந்த பிராதன சந்தேக நபர் ஒருவர் வவுனியா நலன்புரி முகாம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக ஊடகங்கக்கு தெரிவித்துள்ள சிறி லங்கா காவற்துறைப்பேச்சாளர் சிரேஸ்ர காவற்துறை அத்தியேட்சகர் ரஞ்சித் குணசேகர, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மீதான தற்கொலைத்தாக்குதலில் தேடப்பட்டுவந்த பிரதான சந்தேகநபர் ஒருவர் சில நாட்களின் முன்னர் வவுனியாவில் உள்ள நலன்புரி முகாம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நபர் தர்மலிங்கம் தர்மதரன் என்பவர் என்றும் இவரை கிளி என்றே அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


தற்போது விசேட குற்றப்புலனாய்வுப்பிரிவினர் இந்த தற்கொலைத்தாக்குதல் முயற்சிக்குப் பின்னால் என்ன திட்டங்கள் இருந்தன என்பது குறித்து மேற்படி சந்தேக நபரை விசாரித்துவருவதாகவும் தெரிவித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 01ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பித்தள சந்திக்கு அருகாமையில் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஸ பயணித்த வாகனத் தொடரணிமீது தற்கொலைத்தாக்குதல் ஒன்று இடம்பெற்றமையும் இதில் கோத்தபாய ராஜபக்ஸ மயிரிழையில் உயிர்தப்பியதும் குறிப்பிடத்தக்கதாகும்

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.