Thursday, May 14, 2009

அமெரிக்க அரச தலைவரின் கருத்துக்களை ஏற்க சிறிலங்கா மறுப்பு

இலங்கை நிலைமை தொடர்பாக அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா தெரிவித்துள்ள கருத்துக்களை சிறிலங்கா அரசாங்கம் ஏற்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் ஒன்றிற்கு அனைத்துலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனாலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார்.

ஜக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இலங்கையின் நிலைமை தொடர்பாக விவாதிப்பதற்கு எந்தவிதமான தேவையும் இல்லை என்றும் உறுப்பு நாடுகளுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்தபோதே அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன இவ்வாறு தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் பிரித்தானியாவும் அமெரிக்காவும் உலக அரங்கில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்த முற்படுவதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இலங்கையின் நிலைமை தொடர்பாக விவாதிப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் அரசாங்கத்தின் மீது கண்டனம் தெரிவித்துள்ளன

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.