Monday, May 18, 2009

நாளை தேசிய விடுமுறை தினமாகவும் அறிவிப்பு

பாராளுமன்ற உரையில் பிரபாகரனைப்பற்றி வாய்திறக்காத ராஜபக்சே
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே இன்று நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற சபை ஆரம்பிக்கப்பட்டு 9.45 மணிக்கு சிறப்புரை ஆற்றீனார்.
தமிழில் அவர் 5 நிமிடங்கள் பேசினார். 

அப்போது அவர், ‘’இலங்கையில் நடந்த போர் தமிழர்களுடனான போர் அல்ல; விடுதலைப்புலிகளுடனான போர். இப்போர் முடிவுக்கு வந்துவிட்டது’’ என்றார். 

ஆனால், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக ராஜபக்சே எதுவும் தெரிவிக்கவில்லை. 

பாராளுமன்ற உரையில் பிரபாகரனைப்பற்றி எதுவுமே பேசவில்லை. பிரபாகரன் என்ற பெயரையே அவர் உச்சரிக்கவில்லை. 

நாளை தேசிய விடுமுறை தினமாகவும் அறிவிப்பு 

"இலங்கையின் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தமையை உலகம் முழுவதும் கொண்டாட வேண்டும். நாட்டில் சிறுபான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. இரண்டு தேசிய இனத்தைத் தவிர நாட்டில் வேறேதுமில்லை. அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒன்றாக சமாதானத்துடன் ஒன்றுபட்டு வாழக்கூடிய சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது" என ஜனாதிபதி மஹிந்த ராஜக்பக்ஷ தெரிவித்தார். 

வெற்றியை முன்னிட்டு நாளைய தினம் தேசிய விடுமுறையாக ஜனாதிபதி தனது உரையில் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.