ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும், மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான உதவி செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ்சும் இராணுவ ஹெலிகொப்டரில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட முகாம்களுக்குச் சென்றனர். மோதல் நடைபெற்ற வலயத்திற்கு மேலாக விமானத்திலேயே சென்றதாக பான் கீ மூனுடன் ஐ.நா. விலிருந்து வருகை தந்திருந்த இன்னர் சிற்றி பிரஸ் நேற்று சனிக்கிழமை தெரிவித்திருக்கிறது. |
இலங்கைக்கு பயணமாவதற்கு முன்னர் ஹோம்ஸ்சுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அந்தச் சந்திப்பின்போது இலங்கைக்கான பயணம் தொடர்பாக ஹோம்ஸ் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது. நெருக்கடிச் செயற்பாட்டுக் குழு ஏற்பாட்டாளர் உட்பட அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் சில இலங்கையில் தமது பணிகளை நிறுத்திக்கொள்ள திட்டமிட்டிருந்ததை அவர்களின் சந்திப்பின் போது இடம்பெற்ற நிகழ்ச்சி நிரல் அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் துன்பப்படும் தமிழர்கள் மற்றும் ஏனையவர்கள் தொடர்பாக ஐ.நா. மற்றும் சிவில் சமூகம் உட்பட சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு இதுதானா என்ற சந்தேகங்கள் காணப்படுகின்றன. அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.நா. இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களுக்கு சேவையாற்றச் செல்லும்போது வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று இலங்கை அரசாங்கம் தடை விதித்திருந்தது. அதனையடுத்து அங்கு செல்வதற்கு இடமளிக்குமாறு ஒக்ஸ்பாம், ஏ.எஸ்பி./ சொலிடர், அக்ரெட், டேனிஸ் அகதிகள் பேரவை, சற்.ஓ.ஏ அகதிகள் பராமரிப்பு, போரூட், யு.எம.சி.ஓ.ஆர்., ரிலீவ் இன்ரர்நஷனல், கன்ரிகாப் இன்ரர்நஷனல், ஷேவ் த சில்ட்ரன், கே.ஆர். வேள்ட விஷன் போன்ற அமைப்புக்கள் கூட்டாக அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. இவற்றைவிட தமிழ் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயற்பாட்டு நிலைமைகளை மேற்கொள்ள முடியாத நிலைமையை எதிர்கொண்டுள்ளனர். இலங்கைக்கு பயணமாவதற்கு முன்னர் குறிப்பிட்ட சில அரச சார்பற்ற நிறுவனங்களுடன் நியூயோர்க்கில் சந்திப்பை நடத்தியிருந்தார். மிக விரைவில் இலங்கையிலிருந்து தாங்கள் பணியை நிறுத்தப்போவதாக சில நிறுவனங்கள் தெரிவித்திருந்த விடயம் இன்னர் சிற்றி பிரஸ்சுக்கு கசிந்துள்ளது. அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு மூடிய கதவுகளுக்குள் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருந்ததை இன்னர் சிற்றி பிரஸ் சுருக்கமாக வெளியிட்டுள்ளது. பயணமானது கொண்டாட்டங்களில் இணைந்து கொள்வதற்கு அல்ல. கவனமாக இருத்தல் வேண்டும். 12 மணித்தியாலத்திற்கே பயணம் மேற்கொள்ளப்படும். முகாம்களுக்குச் செல்லுதல், மோதல் வலயத்திற்கு மேலாகச் செல்லுதல் (காலநிலையைப் பொறுத்து) ஜனாதிபதி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்தல், ஊடகங்களுடன் பேசுதல், சாத்தியமானால் சிவில் சமூகத்தை சந்தித்தல். படையினரைத் தவிர மோதல் வலயத்திற்குள் எவரும் இல்லை என்பது தெளிவானது. ஐ.நா.வாவது மோதல் வலயத்திற்கு மேலே பறந்து சென்றதைத் தவிர ஹெலிகொப்டரிலிருந்து எதனையும் பார்க்கவில்லை. |
Saturday, May 23, 2009
மோதல் வலயத்தின் மேலாக ஹெலியில் சென்றே பான் கீ மூன், ஜோன் ஹோம்ஸ் பார்வையிட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment