Wednesday, May 13, 2009

கனரக ஆயுத பாவனை குறித்த அரசாங்கத்தின் உறுதிமொழி பொய்ப்பிக்கப்பட்டுள்ளது

யுத்த வலயத்தில் கனரக ஆயுத பாவனை குறித்த அரசாங்கத்தின் உறுதிமொழி பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. வன்னி மோதல்கள் குறித்து அண்மையில் வெளியிடப்பட்ட செய்மதிப் படங்கள் மூலம் அரசாங்கப் படையினர் மோதல் தவிர்ப்பு வலயத்தில் நடாத்தும் உக்கிர தாக்குதல்கள் அம்பலப்பலமாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

வைத்தியசாலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இலங்கை இராணுவமே பொறுப்பு கூற வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரையில் சுமார் 30 வைத்தியசாலை அரசாங்கப் படையினரின் தாக்குதல்களுக்கு இலக்காகியிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.